logo
4 ஆண்டுகால ஆட்சியில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவுசெய்து இன்று 5வது ஆண்டில் எடுத்து வைக்கிறது இது குறித்து சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசியவர் , ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின்திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரங்களை எதிர்க் கட்சிகள் பரப்பி வருகின்றன.

பாஜக ஆட்சியில் மக்களிடம் வாங்கும்திறன் அதிகரித்துள்ளது, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு அதிக வரி வருவாய் கிடைத்துள்ளது . பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெறும் ஆட்சியை பிடிக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.