logo
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்து
மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

 
95வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்து செயல்பட்டு வெற்றி  பெற்றவரும், தமிழகத்தின் அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் ஐயா கலைஞர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான 95வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
100ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்ற இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அற்புதமான அவரது தமிழை கேட்கும் ஆவலோடு இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக அவரது குரல் கேட்க காத்திருக்கிறேன் என்பதை இந்த நல்ல நாளில் தெரிவித்து,  டாக்டர் கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல்  வாழ வேண்டும் என மீண்டும் வாழ்த்தி எல்லாம் வல்ல அன்னை சக்தியின் அருள் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
– பொன். இராதாகிருஷ்ண