logo
மாணவன் ஈஷ்வர் சர்மாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்து

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

பிரதமர் திரு.ந ரேந்திர மோடி அவர்களின் பெரு முயற்சியால் உலகிற்கு இந்தியாவின் கொடையான யோகா 2015 முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன். 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பயனாக,  இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் ஈஷ்வர் சர்மா கனடாவில் நடந்த உலக மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் இங்கிலாந்து சார்பில் கலந்து கொண்டு யோகாவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்த நிலையில் ஈஷ்வர் சர்மா-விற்கு இந்த ஆண்டின் சிறந்த இங்கிலாந்து இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, உலகளவில் அவருக்கு மட்டுமல்லாமல் யோகாவிற்கும் மிகப் பெரிய கௌரவத்தை ஏற்படுதியுள்ளது என்பது திண்ணம்.

இந்த சாதனை சிறுவன் குழந்தைகளிடம் யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

மாணவன் ஈஷ்வர் சர்மாவிற்கும், யோகா கலையை கற்க தூண்டிய பெற்றோருக்கும், சாதனையை புரிய துணை நின்ற ஆசிரியர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈஷ்வர் சர்மா போன்று பலர் இந்த யோகா கலையை கற்று அதன் தூதுவர்களாக மாறி இந்தியாவின் ஆரோக்கிய கலையான யோகாவில் உலகளவில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்