logo
வணிகர்கள், கட்டிட உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் சென்னை மாநகராட்சி சொத்துவரி இருக்க வேண்டும்

சென்னை மாநகராட்சிக்கு பிரதான வருவாய் சொத்துவரி மூலமே கிடைத்து வருகிறது. ஆனால் 1998க்குப் பிறகு சொத்துவரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்படவில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான வரி உயர்வு நிர்ணயிக்க இருப்பதாகவும், சில பகுதிகளில் 100 சதவீத வரி உயர்வு இருக்கும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதே போன்று தான், பல ஆண்டு காலமாக அரசு பஸ் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தாமல், தீடீரென்று உயர்த்திய போது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அது போன்ற நிலை சென்னை மாநகராட்சி சொத்துவரி விதிப்பு மாற்றத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது.

சென்னை மாநகராட்சி மகாநகரமாக விரிவுப்படுத்தப்பட்ட பொழுது, சென்னை நகர எல்லையைத் தாண்டி காஞ்சி, திருவள்ளுர் மாவட்டத்தின் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 61 வார்டுகளும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 32 வார்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதிகளில், பழைய நகராட்சிகள், பேரூராட்சி முறைகளின் படி வரிவசூல் நடைபெற்று வந்தது. அவை அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. இப்போது சென்னை மாநகராட்சி என்று ஒரே மாநகராட்சியின் கீழ்வந்தாலும் “நில மதிப்பு” “கட்டிட மதிப்பு” “குடியிருப்புகளின் மதிப்பு” “வணிக வளாகங்களின் மதிப்பு” பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. எனவே புதிதாக மாற்றியமைக்கப்படும் வரி விகிதங்களை நன்கு சீராய்வு செய்து மக்கள், வணிகர்கள், கட்டிட உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில், நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)