logo
சென்னை விமான நிலையத்தில் ஓய்வறைகள் கட்டுவதற்கு ஏற்பாடு

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகப் பத்திரிகை செய்தி

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட ஓய்வறைகள் கட்டுவதற்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், மத்திய வர்த்தகம், தொழிற்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு. சுரேஷ்பிரபு அவர்களிடம் (10/05/2018) அன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்கள்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் நவீன முறையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வேளையில், சென்னைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக 20 ஓய்வறைகள் கட்டுவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்கள், மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட்டு விமான பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.