logo
பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களுக்கு, புகழ் அஞ்சலி கூட்டம்

பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களுக்கு, புகழ் அஞ்சலி கூட்டம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கான புகழ் அஞ்சலிக் கூட்டம் 28.08.2018 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த புகழ் அஞ்சலி கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி  உரையாற்றவுள்ளனர். அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ்

மனிதவள மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. பிரகாஷ் ஜவடேகர், மத்திய இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. னு. ஜெயகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. S திருநாவுக்கரசு, திமுக மகளிர் அணித்தலைவர் திருமதி. கனிமொழி MP பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு.G.K. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு. தொல். திருமாவளவன், புதிய தமிழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் S. கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் திரு. B.S. ஞானதேசிகன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் திரு. K.A.M. முகமது அபு பக்கர் MLA, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் T.R. பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் திரு. T. தேவநாதன் யாதவ், புதிய நீதிக்கட்சி தலைவர் திரு. A.C. சண்முகம் மதிமுக துணை பொதுச்செயலாளர் திரு. C.E. மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச்செயலாளர் திரு. மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட்) மத்திய கமிட்டி உறுப்பினர் திரு. P. சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் திரு. ச. வித்யாதரன் ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தவுள்ளனர்.

நிறைவாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல. கணேசன் EX MP அவர்கள் நினைவஞ்சலி, புகழுரை நிகழ்த்துகிறார். பாரதத் திருநாடு முன்னேற்றம் பெற தன் வாழ்வையே அர்பணித்த பாரதரத்னா வாஜ்பாய் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசைசௌந்தரராஜன்)