logo
பாஜக செயற்குழுவில் தமிழிசைக்கு தேசிய தலைவர் அமித் ஷா பாராட்டு
இன்று டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கேரளம் (வெள்ளப் பணிகள்) தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் மிசோரம் மாநிலத்தில் பாஜ வின் வளர்ச்சி பணிகளை பாராட்டி பாஜக தேசிய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள் கட்சி பணிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அம்மாநில தலைவர்களை பேச அழைத்தார், மேலும் 17,000 க்கும் மேற்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தை வெற்றிகராக நடத்திய தமிழக பாஜக வின் பணி பாராட்டப்பட்டது,
அதை தொடர்ந்து செயற்குழு தீர்மானங்களை ஆதரித்து பேசிய தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்தும், அதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து உரையாற்றினார், அப்போது மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மதுரை மாவட்ட பாஜக சார்பில் “தாமரை சேவகன்” முயற்சியை பாராட்டி, தற்போது தமிழகம் முழுவதும் இப்பணி விரைவில் தொடர உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த மோடி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்