logo
நரேந்திர மோடி திசையறியா மக்களுக்கு திசைகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.

திசையறியா மக்களுக்கு திசைகாட்டும் துருவ நட்சத்திரம் போல் இந்திய திருநாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நின்ற நேரத்தில் இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் தோன்றி பிரதமராக பொறுப்பெடுத்து, நான்கு ஆண்டுகளுக்குள்ளாக உலகின் முதல் நிலை நாடாக இந்தியா உருவாக வழி காட்டி, வழி நடத்தி, எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் வெற்றி முழங்கச் செய்து அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறுகிறது என்று ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து முழங்க வைத்து, உலக நாடுகள் இந்தியாவை வணங்கி வலம் வர வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 65வது பிறந்த நன்நாளில், அவருக்கு நீண்ட ஆயுளை, நிறைந்த பலத்தையும் அன்னை சக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இனிவரும் காலங்களில் இந்தியா சாதனைகள் பல படைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு என்றும் வெற்றி பெறவும், சாதி, மத, மொழி அரசியல் பாகுபாடு கடந்து ஒவ்வொரு இந்தியனும் துணையாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.
– பொன். இராதாகிருஷ்ணன்