logo
சகோதரர் பரிதி இளம்வழுதி மரணம் தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு

சகோதரர் பரிதி இளம்வழுதி அவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் குடும்ப நண்பராக,சகோதரராக கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு பாசத்துடன் பழகியவர். எளிமையானவர், ஏழை,எளிய மக்களுக்கு எப்போதும் உதவுபவர். கடின உழைப்பாளி,கொள்கை துடிப்புடன் மக்கள் பணியாற்றுபவர்.அவருடைய இளம் வயதில் ஏற்பட்ட மரணம் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி தமிழக சமுதாயத்திற்கும் பேரிழப்பு.அவரது குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.