logo
இந்த தீபாவளி சரித்திரத்தில் மிக முக்கியமானது

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்கள்  குடும்பங்களில் செல்வம் செழித்து, மகிழ்ச்சி பொங்கி வருகின்ற காலங்களில் குதூகலமான ஒரு குடும்பமாக உங்கள் குடும்பம் விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

இந்த தீபாவளி திருநாள் நம்முடைய நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாளாக உருவாகியிருக்கின்றது. காரணம், கடந்த நான்கரை ஆண்டுகளாக நம்முடைய நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், ஏராளமான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி இருந்தாலும் கூட, இந்த தீபாவளி பரிசாக அவர் நம் நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய மிக அற்புதமான திட்டம், இந்த நாட்டில் 6 கோடிக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்ற சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கான முன்னேற்றத்திற்காகவும், தொழிலை விரிவுப்படுத்துவதற்காகவும், பொருளாதார வசதிகளுக்காகவும் , ஒரு போன் கால் மூலமாக ஒரு கோடி ரூபாய்க்கு உட்பட்ட தேவைகளை பதிவு செய்வார்கள் என்று சொன்னால், வங்கி மூலமாக ஒரு 59 நிமிடத்திற்குள்ளாக அவருடைய முறையான கோரிக்கை ஏற்கப்பட்டு ஒரு கோடி ரூபாய்க்கான தொழில் முனைவோருக்கான கடன் வசதி செய்து கொடுக்கும் வகையில்  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்த தீபாவளி பரிசை அறிவித்திருக்கின்றார்.

ஏறக்குறைய பதினொன்றரை கோடி மக்கள் தொழில் புரியும் இந்த சிறு, குறு தொழில் மையங்களுடைய முன்னேற்றத்திற்கு இது பெரிய அளவிலேயே உதவிகரமாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

அது மட்டுமல்ல, நமது பிரதமர் அவர்கள் நம்முடைய நாட்டு மக்களின்  சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அறிவித்த மிக உன்னதமான திட்டமான ஆயுஷ்மான் பாரத் மூலம் நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் மக்கள் நல்வாழ்வு மையங்கள் திறக்கக்கூடிய ஏற்பாடுகளோடு கூட, நாட்டில் இருக்கின்ற ஏறக்குறைய பத்தரை கோடி குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, மருத்துவ வசதிக்காக 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ உதவி பெறக்கூடிய வகையில் காப்பீடு திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த ஒரு மாதத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று ஏராளமான மக்கள் நலன் பேணும் பல  திட்டங்களை தந்திருக்கின்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்