logo
‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்யும்

‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தமிழக முதல்வருக்கு தொலைபேசியில் பேசிய பின் நம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மீட்பு படைகள், விமானம் மற்றும் கப்பல் படை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கட்சி எல்லை கடந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவி வருகிறார்கள். அனைவரும் நம்மால் இயன்ற அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். அதுமட்டுமல்ல கஜா புயலால் பாதிக்கப்பட்ட அறிவிப்பு வந்த உடனேயே முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட, மாநில முதலமைச்சர் அவர்களுக்கும், அவரின் வழிகாட்டுதலுக்கிணங்க களத்தில் இறங்கி பணியாற்றிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். இதைக் காலையிலேயே என் டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறேன். சுகாதாரத்துறை பல நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் மழைக்காலத்தில் வரும் நோய்கள் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, இக்காலத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதை நாம் அறிந்ததே. ஆக அவற்றின் பெருக்கம் தடுக்கப்பட வேண்டும்…. கொசு வலைகள் கூட இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்யலாம்…. ஆக அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பா.ஜ.கவும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.