logo
பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2  வது இடத்தில் உள்ளது

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சைக்காக அரசு அளிக்கும் தொகை 2 லட்சத்திலிருந்து  5  லட்சமாக  உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 50 கோடி மக்கள் பலன்பெறும் அளவிற்கு பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 5 லட்சம் என்று அறிவித்திருந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மத்திய அரசு கொடுத்திருக்கும்  விதிமுறைகளின் அடிப்படையில் 77 லட்சம் பேர் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக மாறுவர்,

இன்னும் 80 லட்சம் பேர் ஏற்கனவே மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்று வருவதால் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டில் கிடைக்கும் தொகை  5 லட்சம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயலாற்றி கொண்டிருந்தாலும் இன்று உயரிய சிகிச்சையை பெறுவதற்கு காப்பீட்டு தொகையை  2 லட்சத்திலிருந்து   5  லட்சமாக உயர்த்தப்படுவதற்கு பாரதப்பிரதம  மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் துணை புரிந்திருக்கிறது.

ஏற்கனவே  மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் ஆனால் தமிழகத்தில் அதை 5லட்சமாக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்த மரியாதைக்குரிய நம் பாரதப்பிரதமர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலாற்றி  கொண்டிருப்பதால் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுதொகை 5லட்சமாக உயர்த்தப்படுகிறது.ஆனால் மருத்துவ காப்பீட்டு இல்லாத மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு  முழுவதுமாக 5 லட்சம் தொகை பிரதமரின் திட்டம் மூலம் கிடைக்கிறது.இந்த திட்டத்தின் மூலமாக  நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவர்.மேலும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2  வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.