logo
பாராளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை திருவுருவபடத்தை நிறுவ வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இந்திய பாராளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவபடத்தை நிறுவ வேண்டுமென வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் திருமதி.Dr.தமிழிசை சௌந்தராஜன் அவர்களின் முன்னிலையில் மரியாதைக்குரிய மக்களவை சபாநாயகர் திருமதி.சுமித்ரா மகாஜன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மக்களவை  சபாநாயகரும் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். உடன் இளைஞரணி மாநிலத்தலைவர்திரு.வினோஜ் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் திரு.தயாசங்கர்,விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் திரு.கணேஷ்குமார் ஆதித்தன், இளைஞரணி மாநில செயலாளர் வேல்.ஆறுமுகம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் திரு.தமிழ்ச்செல்வன், திரு.மகராஜன்,  பொருளாளர் திரு.பாபு ஆகியோர் உடனிருந்தனர்.