logo
அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

வேலைநிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ள  தமிழக அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்-Dr.தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை.

      தமிழ்நாடு அரசாங்க மருத்துவர்கள் சங்கம் ஊதிய உயர்வு,பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைக்களுக்காக  வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் புதிய மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதற்கு தமிழ்நாட்டிற்கு வருகின்ற நிலையில் மருத்துவ கல்லூரிகளின் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் என்பது பல்வேறு  ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.ஏனெனில் போதுமான மருத்துவர்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரடியாக ஆஜராகவிட்டால் போதிய மருத்துவ ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு இதனால் 200 முதல் 300 மாணவர்களின் மருத்துவ இடங்கள் ரத்து செய்வதற்கான ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்.இதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் ,மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும்.

   நாடு முழுவதும் ஏறத்தாழ 6000 முதல் 10000 மருத்துவ பட்ட மேற்படிப்பு புதிய இடங்கள் நம் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் அரசாங்கம் உருவாக்கியுள்ள நிலையின் அடிப்படையில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள  அரசு மருத்துவர்களை அழைத்து தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்  என்று கோரிக்கை விடுக்கிறேன்- Dr.தமிழிசை சௌந்தராஜன்.