logo
கஜா புயல் நிவாரணம் மத்திய வேளாண் துறை அமைச்சருடன் சந்திப்பு

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிகை செய்தி.

மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/12/2018)  மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர்கள் திரு. கருப்பு முருகானந்தம் மற்றும் திருமதி. வானதி ஸ்ரீனிவாசன், மாநில செயலாளர் திரு. எஸ்.கே. வேதரத்தினம், தமிழக பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் திரு. பொன்.விஜயராகவன் அவர்களுடன் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து, கஜா புயலின் காரணமாக தமிழக தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்தும், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் மேம்பட செய்யவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் அவர்கள்,  என் அமைச்சகத்தின் முழு ஒத்துழைப்பையும் தமிழக விவசாயிகளுக்கு கொடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்