logo
கிறிஸ்துமஸ் விழாவில் மத வெறியூட்டும் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் கூட்டணி சேர்க்க கூட்டம் நடத்துவார் .அதே பாணியில் நேற்று கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பேசுவதாக கூறி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார் இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? எங்களை மதவாத கட்சி என்று முத்திரை குத்தும் நீங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக கிறிஸ்துமஸ் விழாவில் நின்று கொண்டு மதவெறி விஷம் பரப்பும் கருத்துக்களை கூறுவது என்ன நியாயம்?

பாஜக ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு விரோதமான ஆட்சி என்கிறீர்கள் கடந்த 4 1/2 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக என்ன விரோத நடவடிக்கைளை மேற்கொண்டது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? கிறிஸ்துவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி கொடிகட்டிப் பறக்கின்றது.மத்திய அமைச்சரைவையில் பிரதமர் மோடியுடன் இணைந்து கிறிஸ்துவ சமுதாய பிரதிநிதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள் .

பிரதமர் மோடி அரசுடன் கிறிஸ்துவ மக்கள் இனக்கமாக இருந்து விட்டால் நமக்கு ஆபத்து என்று வாக்கு வங்கி அரசியலுக்காக கிறிஸ்துமஸ் விழாவில் மக்களிடம் மதவெறியை தூண்டி வன்முறைக்கு வழிவகுக்கிறீர்கள் வேண்டாம் இந்த ஆபத்தான விளையாட்டு தமிழகத்தை அமைதி பூங்காவாக இருக்க விடாமல் ஓட்டு வங்கிக்காக சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய நினைப்பது தவறு. இதுதான் உங்கள் மதசார்பின்மையா?. நீங்கள்தான் மதவெறியை தூண்டிவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க நினைக்கிறீர்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.பிரதமர் மோடியை மதவாதி எனக்கூறும் நீங்கள் தேர்தலுக்காக கோவில் கோவிலாக சென்று நானும் இந்து பிராமணன் பூணூல் அணிகிறேன் என்று பேசிய ராகுல் காந்தியை வேண்டாம் இந்த போலி வேஷம் என்று கண்டிக்கும் தெம்பும்,திராணியும் உங்களுக்கு உண்டா? தொடர்ந்து ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறி பரப்புவது,சிறுபான்மை மக்களை பிரிப்பது நீங்களும் காங்கிரசும்தான்.இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.