logo
அரசு மருத்துவமனைகள் மீது அவதூறு பரப்பும் அரசியல் தலைவர்களுக்கு கண்டனம்

அரசு மருத்துவமனைகள் மீது அவதூறு பரப்பும் அரசியல் தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் Dr. தமிழிசை கண்டனம்.

அரசு மருத்துவமனைகளின் அவலங்கள்,குறைகள் சரிசெய்யப்பட்டு அவை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மக்களே விரும்பிச்சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நிலைமை வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நம் அனைவரின் விருப்பமும் அதுவே. அரசு மருத்துவமனைகளெல்லாம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மக்கள் நலம்பெற தரம் உயர்த்தப்பட்டு தரச்சான்று உறுதி செய்யப்பட வேண்டும். அதனால் இன்றைய சூழ்நிலையில் ஏழை,எளிய மக்கள் நடுத்தர வகுப்பினர் பயன்பெறும் அரசு மருத்துவ மனைகளின் தரம் உயர்த்தப்பட்ட வேண்டும். எனவே ஏழைகளின் உயிர்காக்கும் அவசர, ஆபத்து காலங்களில் பெரும் சேவை ஆற்றுவது அரசு மருத்துவமனைகளே.இன்றைய சூழலில் அரசு மருத்துவர்கள்,செவிலியர்கள்,தனியார் மருத்துவமனைகளில் அதிகம் வருமானம் கிடைக்கும் என்று சென்று விடாமல் அரசு பணிகளிலே தொடர்வது மக்களுக்கு அவர்கள் ஆற்றும் சேவையாகும்.

பொது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஏதோ அன்கொன்றும்,இங்கோன்றும் ஏற்படும் தனிப்பட்ட சிலரது கவனக்குறைவால், அலட்சியத்தால் நடக்கும், மருத்துவ துறை சார்ந்த விபத்துகள் பூதாகரமாக சித்தரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு சில அரசியல்வாதிகள் போட்டி போட்டுகொண்டு வீண் புரளிகளை பரப்ப துணைபோவது நாட்டிற்கும்,பொதுமக்களுக்கும் நல்லதல்ல. என்பது பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே இயங்கிவரும் மருத்துவசேவைகளை செம்மைப்படுத்தி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் இதுவே மக்களின் விருப்பம்மும்கூட. அடுத்தடுத்து வரும் அரசு மருத்துவமனை பற்றிய தொடர் புகார்கள் வெறும் புரளி என்று இல்லாமல் தீர விசாரித்து அதன்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனிப்பட்ட சிலரின் அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்க படவேண்டும் சமீப காலத்தில் மத்திய ,மாநில அரசுகளால் ஆண்டாண்டு காலமாக தீர ஆலோசித்து கொண்டுவரப்பட்டு இன்னும் நிறைவேறாமல் காத்திருக்கும் மருத்துவத்துறை சார்ந்த மருத்துவமனை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் காலத்தின் தேவை.அவற்றை மனிதாபினமாத்தோடு நிறைவேற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு.

அரசு மருத்துவமனைகள் தீராத அவலங்களுக்கு கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்ற கழகமும் பொறுப்பு அல்லவா? பல்லாண்டு காலமாக தீர்க்கப்படாமல் பல்வேறு அரசு மருத்துமனை பிரச்சினைகளுக்கு இதுவரை தமிழகத்தை பலமுறை ஆண்ட திராவிட முன்னேற்ற கழகமும் பொறுப்பேற்கவேண்டும்.எதிர்க்கட்சியில் இருக்கும்போது குறைகளை விமர்சனம் செய்யவதும், ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை சரிசெய்யாமல் விடுவதும் கடந்த கால நிகழ்வுகள் இவை அனைத்தும் சரி செய்யப்படவேண்டும்.வீம்பு அரசியலுக்காக அரசு மருத்துவமனைகளின் மீது அவ நம்பிக்கையை மக்கள் மீது ஏற்படுத்த வேண்டாமென்று தமிழக அரசியல் தலைவர்களை Dr. தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.