logo
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 4 ஆண்டுகள் நமது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டுகளாக அமைந்தன. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமைத்திறனால் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தைக் கண்டது. நாட்டு மக்களின் இன்றைய தேவையை மட்டும் கருதாமல் எதிர்கால முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை வகுத்து ஒவ்வொரு தனி மனிதனும் தன் உழைப்பால் முன்னேறி தன்மானத்துடன் வாழும் தகுதியை பெற்று கொடுத்த ஆண்டாக கடந்த நான்கு ஆண்டுகள் கடந்தன. இதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் நமது கௌரவம் உயர்ந்துள்ளது.

தூய்மையான இந்தியா, தொழில் வளம் நிறைந்த இந்தியா, விவசாய வளம் நிறைந்த இந்தியா என்ற பன்முக வளர்ச்சியோடு பலம் பொருந்திய இந்தியாவாகவும் மாறியுள்ளது.

இனிவரும் கால வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட ஆண்டாக கடந்த 4 ஆண்டுகள் அமைந்து நமக்கு பெருமை சேர்த்தன.

தற்போது 2019 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சமயத்தில், நாட்டின் நலன் கருதியும், நம் குடும்பங்களில் நலன் கருதியும் ஒரு உறுதியான முடிவை எடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அடித்தளம் இடுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதன்மேல் எழுப்பப்படும் உறுதியான அழகான கட்டிடம் என்பதை நாம் உணர வேண்டும்.

உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்ல முடிவினை எடுத்து, நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

2019ஆம் ஆண்டு நம் ஒவ்வொருவருக்கும் நல்லதை அள்ளித் தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்