logo
அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் , மங்கலம் தங்க வேண்டும்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் அதன் மூலம் மங்கலம் தங்க வேண்டும், என்று இறைவனை வணங்குகிறேன்.

இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டோடு இந்த பொங்கல் நடைபெற நல் ஏற்பாடு செய்திருக்கிறார் நம் பாரதப்பிரதமர். நம் தமிழர்களின் உணர்வோடு நம் கட்சி ஒன்றியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

இந்த பொங்கல் ஆரோக்கிய பொங்கலாக மலர, மருத்துவ காப்பீட்டுத் திட்டமும், சமூக நீதிப் பொங்கலாக மலர, 10% இடஒதுக்கீடும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் தாமரைப் பொங்கலாக, தமிழகத்திற்கு AIIMS கிடைக்கும் தாமரைப் பொங்கலாக தமிழ்ப்பொங்கலாக மலரும், இந்த பொங்கல், தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்