logo
உலகத்தின் தலைசிறந்த நாடுகளுல் ஒன்றாக நம் நாடு உருப்பெற்று வருகிறது

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் குடியரசு தின வாழ்த்து செய்தி.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய தினம் நம்முடைய நாட்டினுடைய மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான குடியரசு தினம் நாடு முழுக்க இருக்கக்கூடிய அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் குடியரசாக மாறி 70 ஆண்டுகள் ஆகின்ற இந்த காலகட்டத்தில், நம்முடைய நாடு உலகத்தினுடைய தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக உருபெற்று வந்து கொண்டிருக்கின்றது.

இன்று நம்முடைய நாட்டினுடைய தலைவர், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக நாடுகளால் மதிக்கப்படுகிறார் என்று சொன்னால், அதற்கு அடிப்படைக் காரணம், நம்முடைய நாட்டினுடைய எல்லா துறைகளும் வளர்ச்சி பெற்ற துறைகளாக, பொருளாதாரத்தில் முன்னிலை பெற்று வரும் நாடாக நம்முடைய நாடு உயர்ந்து இருப்பதால் தான், இன்று நம்முடைய நாட்டினுடைய பிரதமர் அவர்கள் உலக மக்களால் போற்றப்படுகின்றார், மதிக்கப்படுகின்றார். இந்த உயர்ந்த நிலையை நமக்கு பெற்றுத் தந்த நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இந்த குடியரசு நாளிலேயே நாம் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

இனி வருகின்ற காலங்களில் நம்முடைய நாடு உலகத்தினுடைய முதல் நிலை நாடாக உருவாகக் கூடிய வகையில் இந்த நாளில் நாம் சபதம் எடுப்போம். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முழு துணையாக நின்று, அவர் காட்டிய வழியில் நடைபயில்வோம். நம்முடைய நாட்டை முதல்நிலை நாடாக உலக அளவில் உயர்த்திக் காட்டுவோம். அது மட்டுமே இந்த குடியரசு நாளில் நாம் எடுக்க கூடிய ஒரே உறுதிமொழியாக, ஒரு வைராக்கியமாக அமைந்தாக வேண்டும்.

நம்முடைய நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுடைய எதிர்காலம், நம்முடைய விவசாயிகள் எதிர்காலம், பெண்களுடைய முன்னேற்றம் இவை எல்லாம் இனி வரும் காலங்களில் உச்சத்தை அடைந்தாக வேண்டும்.

தற்போது இருக்கின்ற நிலையைவிட மகோன்னதமான நிலைக்கு நம்முடைய இளைஞர்களுடைய எதிர்காலம் அமைந்தாக வேண்டும். அனைவருக்கும் எனது 70 வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்!

– பொன். இராதாகிருஷ்ணன்