logo
விருதுகள் பெற இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதீய ஜனசங்க தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களுக்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல துறைகளில் சிறப்பாக பணிபுரிவோருக்காக ஆண்டு தோறும் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும் பத்ம விருதுகள் இவ்வாண்டும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசால் அறிவிக்கப்பெற்றுள்ளது. பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசு திறமை, அர்ப்பணிப்பு, சாதனை போன்றவற்றை மட்டுமே அளவுகோலாக கொண்டு இவ்விருதுகளை வழங்கி வருவதை நாம் அறிந்ததே.

அந்த வகையில் இவ்வாண்டு நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய், ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, ஜிபோதியின் அதிபர் இஸ்மாயில் ஒமர் கியுலே, ‘எல் அண்டு டி’ நிறுவன தலைவர் ஏ.எம்.நாயக் ஏ.எம்.நாயக்,

மஹாராஷ்டிராவை சேர்ந்த, பிரபல நாடக கலைஞர் பல்வந்த் மொரேஷ்வர் புரந்தரே ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண், மலையாள நடிகர் மோகன்லால், கேரளாவை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது, கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், நடன இயக்குனர் பிரபுதேவா, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள், 11 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், 3 பேருக்கு மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் 112 பேரில் ஒருவர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

விருதுகள் பெற இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்