logo
எளிமையின் சின்னமாக வாழ்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்

கோவா முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு.மனோகர் பாரிக்கர் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

எளிமையின் சின்னமாக வாழ்ந்த முதல்வர் என்பதை பாதுகாப்பு அமைச்சராக தமிழகம் வந்தபோது அவருடன் இராமநாதபுரம் அப்துல் காலம் நினைவு மண்டபம் அமைக்க ஆய்வு செய்ய பயணித்தபோது அவருடைய எளிமையான நடை,உடை செயல்பாடுகள் என்னை பிரமிக்கவைத்தது.அவருடன் பயணித்த அரை மணி நேரத்தில் எனக்கும் தமிழக பாஜக வளர்ச்சிக்கும் அவர் வழங்கிய ஆலோசனைகள் கண்ணீருடன் நினைத்து பார்க்கிறேன்.

உடல் நலிவுற்ற நிலையிலும் மெய் வருத்தம் பாராமல் முதல்வராக கடைமையாற்றிய கண்ணியவான்.சிறுபான்மை மக்கள் நிறைந்த கோவா மாநிலத்தில் மக்களின் நம்பிக்கையை வென்றடுத்து பாஜக அரசை அமைத்து சிறப்பாக நல்லாட்சி நடத்தியவர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அன்னாரது குடுமத்திற்கும்,தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.