logo
ஜே.கே.ரித்திஷ் மறைவு மனவேதனையை அளிக்கிறது

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் அவர்கள் இன்று (13/04/2019) தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பால்
உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.