logo
மக்கள் அறவழியில் போராட வேண்டும்

முத்தரையர் சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக முத்தரையர் சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றது. ஒரு குறிப்பிட்ட நலிந்த சமுதாயத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், வாட்ஸப் பதிவில் மிகவும் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசிய அந்த சமூகவிரோதிகள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

ஆனால் 48 மணி நேரம் கடந்த பின்பும்  சம்பந்தப்பட்ட, இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த சமூகவிரோதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்படாதது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று.

இந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. ஆனால் அனைவரும் இந்த சமூகவிரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து, நம் மக்கள் அறவழியில் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடவடிக்கையை எடுத்து , சமூகவிரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்.                                                                    

            என்றும் தாயகப் பணியில்

                                                                                                                                                                               (H.ராஜா)

பாஜக தேசிய செயலாளர்.

சிவகங்கை பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர்.