logo
குமரேச சீனிவாசன் அவர்களின் மரணம் பாரதிய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் அவர்களின் மரண செய்தி கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்தேன். அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கடுமையாக உழைத்தவர். கட்சியின் கொள்கைகளை உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்து தொண்டர்களோடு தொண்டராக பணியாற்றியவர். அவரது இழப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும். அவர் இல்லை என்பதை நம்ப எனது மனம் மறுக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இழப்பினை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.;

என்றும் மக்கள் பணியில்

(Dr.தமிழிசை சௌந்தரராஜன்)