logo
அன்னையர் தினவாழ்த்துக்கள்

பத்திரிக்கை செய்தி – தமிழக பா.ஜ.க தலைவர் அலுவலகம்.

அன்னையர் தினவாழ்த்துக்கள்.

அன்னையரே நாம் அனைவருக்கும் உலகம்,தொட்டில்முதல் பெற்றெடுத்த தாய் நம் ஒவ்வொரு நிலையிலும் கண்ணும் கருத்துமாக கண்ணின் இமைபோல் காத்து வளர்த்து நம் உற்ற தோழனாக,தோழியாக என்றும் அளவற்ற அன்பு செலுத்தும் அன்னையரை தெய்வமாக ஒவ்வொரு நாளும் வணங்குவோமாக. அனைவருக்கும் அன்னையர் தினவாழ்த்துக்கள்.

உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்

உயிர்காக்கும் மருத்துவ பணியில் முக்கிய கடைமையாற்றும் செவிலியர்களின் சேவையை நினைவுகூறும் செவிலியர் தினத்தில் அவர்தம் அரும்பெரும் சேவைகளை பாராட்டி போற்றி வாழ்த்துவோமாக … செவிலியர்களின் உன்னத சேவைகளை போற்றும் விதமாக வரும் நாளில் அமையவிருக்கும் நம் மோடி அவர்களின் அரசு செவிலியர்களை மருத்துவர்களுக்கு இணையாக பெருமைப்படுத்த திட்டம் தீட்டியுள்ளது…அனைத்து செவிலியர்களுக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.