logo
அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு

DR.தமிழிசை சௌந்தரராஜன் MBBS.,DGO.,

மாநில தலைவர் (தமிழ்நாடு )

அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு,

வணக்கம் ! நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் நமது பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளார்…

இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் ,தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தமளிப்பதாகவே உள்ளது . ஆனாலும் மிகப்பெரிய சோதனைகளை கடந்து தான் நாம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றியை பெற்றுள்ளோம் என்பதுவே எதார்த்தம்…

ஆகையால் நம்மை,நாமாகவே சுயபரிசோதனை செய்வதற்கும் ,வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிட,மண்டல் பொது செயலாளர்கள்,மண்டல் தலைவர்கள் அதற்கும் மேற்பட்ட காரியகர்த்தர்களுடன் நாம் கோட்டத்தில் ஒரு நாள் சந்தித்து நம்முடைய கருத்துக்களை முன் வைப்பதற்கான ஒரு கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாநில தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு.கேசவ விநாயகம் அவர்களும் கலந்துகொள்ள உள்ளோம்.

இக்கூட்டம் பிற்பகல் 03:00 மணிக்கு துவங்கி இரவு 07:00 மணிக்கு நிறைவுபெறும். தாங்கள் தவறாமல் இக்கூட்டத்திற்கு கலந்து கொண்டு வருங்கால தமிழகத்தை வளமாக்குவோம்…

கூட்டத்திற்கு எதிர்ப்பார்க்கப்படுவோர்கள் …

1. தேசிய பொறுப்பில் உள்ளவர்கள்,

2. மாநில நிர்வாகிகள்,

3. கோட்ட பொறுப்பாளர்கள் ,கோட்ட அமைப்பு செயலாளர்கள்,

4. மாநில அணி / பிரிவு தலைவர்கள்,

5. மாவட்ட தலைவர்கள்,மாவட்ட நிர்வாகிகள்,

6. மண்டல் தலைவர்கள்,மண்டல் பொதுச் செயலாளர்கள் ,

7. மாவட்ட அணி / பிரிவு தலைவர்கள்,

8. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்,

9. பாராளுமன்ற முழு நேர பணியாளர்களாக இருந்தவர்கள்,

இக்கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்படும் அனைவருக்கும் தகவல் தந்து சிறப்பான முறையில் நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.