logo
J. P. நட்டா பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது

மரியாதைக்குரிய J. P. நட்டா அவர்கள் பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார் எ‌ன்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் அவரது நீண்ட அனுபவமும், ஈடுபாடும் சென்ற முறை ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் ஹிமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உலகின் மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கும்.

தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் மரியாதைக்குரிய திரு. அமித்ஷா அவர்களின் வழிகாட்டுதலும், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலும் கட்சியை மேலும் மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். த‌மிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வரவேற்புகளையும் தெரிவி்த்துகொள்கிறேன்…

தமிழக பாஜக தலைவர்

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்