logo
ஒரு சிறந்த மரியாதையை காஷ்மீர் பெறுகிறது

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் ஒருசிறந்த மரியாதையை அம்மாநிலம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரை தவிர வேறு எதுவும் கிடையாது. அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. வாக்குச் சாவடி கிடையாது. கல்விச்சாலைகள் கிடையாது. தொழிற்சாலைகள் கிடையாது மருத்துவமனைகள் கிடையாது. ஒரு சதவீதம் மக்கள் தொகை உள்ள அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மூலம் இந்திய பட்ஜெட்டில் பத்து சதவீதம் நிதி செலவிடப்படுகிறது. இவ்வளவு பணம் செலவு செய்தும் எந்தவிதமான வளர்ச்சியும் கிடையாது. சமூக நீதி என்ற பெயரில் பேசிக் கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இன்று இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் அம்மாநில மக்கள் பிறமாநில மக்களைப் போன்று கல்வி, வேலை இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க முடியும். இதனால் காஷ்மீர் பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். லடாக் போன்ற இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் கலவர பூமியாக இருந்து பின்தங்கியே இருந்து வந்தது. காஷ்மீர் சுற்றுலா தலமாக நமது பெருமையை மீட்டு எடுக்கும் இடமாக விளங்கப் போகிறது. இந்த முடிவிற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் இதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்காக அகில பாரத தலைவர் திரு. அமித்ஷாஜி அவர்களுக்கும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடிஜி அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறோம்.

அனைத்துப் பகுதி மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வரலாற்றுப் பிழையை செய்து வருகிறார். அனைத்து மாநில மக்களுக்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்று இருக்கும் நிலையில் அவர் காஷ்மீர் மாநில மக்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். நீங்கள் ஆட்சியில் இருக்கும் போதே அண்டை நாடான இலங்கையில்

உள்ள தமிழ் மக்களுக்கே நீங்கள் பக்க பலமாக இல்லை. சோமாலியா கிரோசிமா நாக சாகியையும் உதாரணம் காட்டி பேசும் வைகோ இன்று இந்தியாவைச் சொல்கிறார். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ் என்று கூறிவிட்டு அவர்கள் கூட்டணியிலேயே இருக்கும் வைகோ போன்றவர்களை பற்றி தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் மகிழ்ச்சி அடையக் கூடிய தருணம். அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.

என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)