logo
பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் முயற்சியால் குமரி FM 101 இனி இணையதள ஆப்பில்

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்னன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி

விவசாயிகளுக்கான வேளாண்மை செய்திகள், மீனவர்களுக்கான புயல் எச்சரிக்கை செய்திகள், மத்திய, மாநில அரசின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள், உள்ளூர் நிகழ்வுகள் போன்று பல சேவைகளை செய்துவரும் அகில இந்திய வானொலி நாகர்கோவில் குமரி FM 101 சேவையை இனி இணையதள ஆப் மூலம் 24 மணிநேரமும் நேரடியாக கேட்க முடியும்.

1984ஆம் ஆண்டு வட்டார வானொலியாக துவக்கப்பட்ட நாகர்கோவில் வானொலியானது முதலில் மாலை 3 மணிநேரம் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் திரு. வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்த திரு, பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், காலை முதல் இரவு வரை 3 நேர சேவையாக மாற்றப்பட்டது. தொலைகாட்சி இல்லாத நேரத்தில் குமரி மாவட்ட மக்கள் பல உபயோகமான செய்திகளை இதன் மூலம் கேட்டறிந்தனர்.

குமரி FM 101 சேவையை தரம் உயர்த்த நினைத்த திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் 2014ஆம் ஆண்டு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த திரு. அருண் ஜெட்லி அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கைகிணங்க 2014 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் குமரி FM 101 சேவை காலை 5.55 முதல் இரவு 11.10 வரை தொடர் சேவையாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலுக்கும் செல்லும் மீனவர்கள் வானிலை அறிந்துகொள்ளவும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண்மை பற்றிய தகவல்களையும், பெண்கள் தங்களுக்கு உபயோகமான குறிப்புகளையும் அறிந்து பயனடைந்து வந்துள்ளனர்.

அகில இந்திய வானொலியின் பெரும்பாலான நிலையங்கள் இணையதள ஆப் மூலம் ஒலிபரப்பாகும் நிலையில், குமரி FM 101 வட்டார வானொலி என்றபடியால் இணையதள ஆப்பில் சேர்க்கப்படாமல் இருந்த செய்தி அறிந்த அப்போது மத்திய இணையமைச்சராக இருந்த திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடம் குமரி FM 101 இணையதள ஆப்பில் இயக்க கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இணையதள ஆப்பில் (News on AIR APP) குமரி FM 101-யை இணைத்துள்ளது. இதனால் குமரி மாவட்ட நிகழ்வுகள், செய்திகள், வானிலை அறிக்கைகள், வேளாண் நிகழ்சிகள், அதில் சொல்லப்படும் உபயோகமான குறிப்புகள் என அனைத்தையும் 24 மணிநேரமும் நேயர்கள் நேரடியாக இணையதள ஆப்பில் இனி கேட்க முடியும். குமரி மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இந்த குமரி FM 101 இனி உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் ஆப் மூலம் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.