logo
முதன்முறையாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றுபட்டு விநாயகர் சதுர்த்தி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுதந்திரம் அடைந்து முதன்முறையாக ஒன்றுபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடப்போகிறோம்.அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் அனைத்து மாநிலங்களிலும் கிடைப்பதற்கு விநாயகர் அருள் புரிந்து இருக்கிறார்.இந்நாட்டு பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி கிடைக்க பிள்ளையார் அருள் புரிந்து இருக்கிறார். வறுமை, லஞ்சம், தீவிரவாதம் போன்ற வினைகளை தீர்க்க விநாயகர் அருள் புரிந்து இருக்கிறார்.

நம் தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெறுக தமிழர்கள் அனைவரும் இன்முகத்தோடு வாழ நம் தமிழ் கடவுளாம் முருகனின் அண்ணன் அன்போடும்,அருளோடும் அருள் பொழிந்து கொண்டு இருக்கிறார்.அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தமிழக பாஜக தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.