logo
ஓணம் திருநாள் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துச் செய்தி.

தெய்வத்தின் பூமியான கேரளத்தின் அதி முக்கிய விழாவான ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறம் பிறழா ஆட்சி நடத்திய மாமன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியின் சொல் தவறாமையை சோதிக்க மூவடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும், ஈரடியாக்கி மூன்றாம் அடிக்கு தன் சிரம் தந்து சொல் காத்த பெருமைக்கு இறவா தன்மை கொடுக்க பகவான் மகாவிஷ்ணுவால் அளிக்கப் பெற்ற வரமே திருஓணப் பண்டிகை.

இந்த அற்புத திருநாளில் சத்தியம் தவறா மகாபலிச் சக்கரவர்த்தியையும், வாமனனாக வந்து அருளிய பகவான் மகாவிஷ்ணுவையும் வணங்குவோம். எம் மண்ணிற்கும், மக்களுக்கும் நலன்கள் குவிய வாழ்த்துகிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்