logo
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவு செய்தி அதிர்ச்சி தருகிறது

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் மரியாதைக்குரிய பி.எச்.பாண்டியன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சட்டமன்றத்தில் சபாநாயகரின் அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை வழங்கிடவும், அன்னாரின் ஆன்மா நற்கதியடையவும் எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்