logo
எங்கள் கோரிக்கையை ஏற்று முடி  திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி

ஊரடங்கு காலத்தை முன்னிட்டு கடை திறக்காத நிலையில் முடி  திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிவாரண தொகை முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினராக உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்கள் அந்தந்த கிராம,  கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஊரடங்கால்  முடங்கிக் கிடக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் என்னால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று. ஏற்கனவே கர்நாடக மாநிலம் அவ்வாறு  நிவாரணம் வழங்கி இருப்பதை சுட்டிக் காட்டி இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட்து. இந்த நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று  தமிழக அரசு நிவாரணம் வழங்க அறிவிப்பு வெளியிட்டிருப்பது  வரவேற்கத்தக்கது.  இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக  முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு  பாரதிய ஜனதா கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தேசப் பணியில்
Dr.L.முருகன்

மாநில தலைவர்