logo
திருச்சி – நெல்லை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகைவண்டியை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க அறிவித்ததற்கு நன்றி
மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி
குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி – நெல்லை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகைவண்டியை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.சுரேஷ்பிரபு அவர்களை சந்தித்து கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (11.03.2017) திருச்சியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.சுரேஷ்பிரபு அவர்கள் திருச்சி-திருநெல்வேலி (22627/22628) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க அறிவித்துள்ளார்கள்.
இதனால் திருவனந்தபுரம் மற்றும் குமரிமாவட்டத்திலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக அமையும். மேலும் வாஞ்சிமணியாச்சி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை ரூ.3,400 கோடியில் பணிகளை விரைந்து முடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மற்றும் இரயில்வே துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் மாநில அரசின் முழுஒத்துழைப்;பு இருந்தால் மிக விரைவாக செயல்படுத்த இயலும் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி கடற்கரை இரயில்வே பணிகளை  விரைந்து துவங்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.சுரேஷ்பிரபு அவர்கள் தெரிவித்தார்கள். இதற்கு மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.