logo
சொந்த சகோதரியை போல் பார்க்க வேண்டிய பெண்களை அடித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காட்டுத்தனமாக காவல் அதிகாரி பாண்டியராஜன் அவர்கள் தாக்கி இருக்கிறார். இன்று அந்தப் பெண்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய போது அவர்கள் விவரித்த நிகழ்வு எனது மனதை உருக்குவதாக இருந்தது.

 
அடி வாங்கிய ஒரு பெண்ணிற்கு காது கேட்கவில்லை. பல பெண்கள் உடல்களில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவிற்கு காவல்துறையினரால்; தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவரின் சொந்த சகோதரியை போல் பார்க்க வேண்டிய பெண்களை அடித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களோடு போராடிய இளைஞர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு போடப்பட்டிருக்கிறது. அது வாபஸ் பெறப்பட வேண்டும். கைதானவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கே மதுக்கடை திறந்த அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்.

 
இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பாரதிய ஜனதாக் கட்சி போராட்டம் தொடரும். வரும் 18-ம் தேதி செவ்வாய்கிழமை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிரதான மதுக்கடைகள் முன்பாக பாரதிய ஜனதாக் கட்சி. பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பு அற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும். வரும் 18-ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும் அந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
என்றும் மக்கள் பணியில்

Dr.தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்