logo
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், பிரதமருடன் சந்திப்பு

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த 5 ஆம் தேதி பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையும், இந்திய பாராளுமன்ற நிகழ்வை காண்பதற்கான அனுமதியும் வேண்டி மத்திய இணையமைச்சர் திரு. பொன் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

சுகாதாரமான குடிநீர், 100% கழிவறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டதை 100% அமல்படுத்துதல், சிறந்த கிராம பஞ்சாயத்து பெண் தலைவர், 100% கிராம சபை தீர்மானத்தை சிறப்பாக நடைமுறைப் படுத்துதல் ஆகியவற்றின்  அடிப்படையில் மத்திய அரசு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.

இந்த விருதுகளை பெறுவதற்காக 60க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கடந்த 10ஆம் தேதி டெல்லி வந்திருந்தனர். இந்த கூட்டமைப்பு தலைவர்கள் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மத்திய இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்தார், அதன்படி இன்று (12/04/2017) தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மத்திய இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் திரு மோடி அவர்கள் தமிழிலேயே வணக்கத்தை தெரிவித்ததோடு ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக விசாரித்தார். அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கிராம பஞ்சாயத்து தலைவர்கலளுடன் வந்த அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் மிக வாஞ்சையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பேசினார். குழந்தைகளின் கல்வி குறித்தும், அவர்கள் எதிர்க்காலத்தில் என்ன ஆகா விரும்புகிறார்கள் என்றும், அவர்களது இலக்கு குறித்தும் கேட்டறிந்த பிரதமர், அவர்களது லட்சியம் வெற்றி பெற வாழ்த்துக்களை தமிழிலேயே தெரிவித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், பிரதமருடனான இந்த சந்திப்பு தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என்றும், இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த மத்திய இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தங்களது உளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.