logo
பாண்டியன் அவர்கள் பாஜக தலைவர்களை விமர்சிக்க தகுதியற்றவர்

கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் திரு. தா. பாண்டியன் அவர்கள் தமிழக பாஜக தலைவர் DR. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தரமற்ற முறையில் விமர்சித்ததை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அரசியலில் பல்லாண்டு காலம் பணிபுரிந்து வரும் திரு. பாண்டியனின் விமர்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் விரக்தியை காண முடிகிறது. தொழிலாளர்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் இருப்பதாக தங்களின் இயக்கத்தை காட்டி கொண்டு வந்தவர்கள் இன்று அனைத்து துறையை சார்ந்த மக்களாலும் நாடு முழுவதும் புறக்கணக்கப்பட்டுள்ளனர்.

இன்று நாடு முழுவதும் செல்வாக்கு பெற்று பல மாநிலங்களிலும், மத்தியிலும் மக்கள் ஆதரவால் பிரம்மாண்ட வெற்றியை பெற்று ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரை தர குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. எங்களுடைய கட்சியின் சிறந்த தொண்டனாக, Dr. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இருப்பது பெருமையான விஷயமே. ஆகவே தேசிய கட்சியெனும் அங்கீகாரத்தை இழந்த இவருடைய கட்சி பாரதிய ஜனதா கட்சியை தரமற்ற முறையில் விமர்சிப்பதை நிறுத்தி கொள்ளட்டும்.

போயஸ் தோட்டத்து தலைவர்களிடம் தன்மானத்தை அடகு வைத்து சுயநல அரசியலுக்காக தன்னுடைய தோளில் உள்ள துண்டை கூட கையில் வைத்து கொண்டு மண்டியிடும் இவர் மத்திய அரசையும்;, பாஜகவையும், அதன் தலைவர்களை பற்றியும் பேச என்ன அருகதையுள்ளது.

தன்னுடைய சொந்த கட்சியின் சொத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரு. பாண்டியன் அவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பாஜகவின் தலைவரை விமர்சிக்க எந்த தகுதியுமில்லை.

தொழிலாளர்களால், விவசாயிகளால் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் பாஜக தலைவர்களை விமர்சிக்க தகுதியற்றவர்;.

என்றும் தாயகப்பணியில்
(K.T. ராகவன்)