logo
92.1 சதவீதங்கள் மாணவ /மாணவியர்கள் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து செய்தி.

 

நடந்து முடிந்த பன்னிரண்டாம்வகுப்பு தேர்வில் 92.1 சதவீதங்கள் மாணவ /மாணவியர்கள் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.75 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். மாணாக்கர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  7.9 சதவீத தோல்வியுற்ற மாணவ / மாணவியர்கள் தோல்வியை கண்டு பயப்படாமல் தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்ற மன தைரியத்துடன் அடுத்து வரவிருக்கின்ற தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற கேட்டுக்கொள்கிறேன்.

 

–    பொன்.இராதாகிருஷ்ணன்