logo
ராகுல் காந்தி சொன்னதும் சொல்ல மறந்ததும் :

கடந்த ஆண்டுகளில் பல முறை சென்னை வந்த போதெல்லாம் அவர்கள் கூட்டணி தலைவர், மூத்த அரசியல்வாதி கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி இந்த முறை அவரது அன்னையார் சார்பில் கலைஞர் வைரவிழாவில் கலந்து கொண்டு திரு. ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து சொன்னதையும், அவர் சொல்ல மறந்ததையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

 

சென்னை வருமுன் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அவர்களின் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் என்ற குற்றம் சாட்டி விட்டு அதே குற்றச்சாட்டு  அவருக்கும் ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்பதனை மறந்து பொய்யுரை ஆற்றியுள்ளார்.

 

தான் பகவத் கீதை போன்ற புனித நூல்களை தற்சமயம் படிப்பதாக கூறும் ராகுல் வேண்டுமென்றல் ஆர்.எஸ்.எஸ் -ல் சேர்ந்து விடலாமே, முறையான ஆன்மிக அறிவும், தேச பக்தியும் பெற. ஏனென்றால் உங்கள் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் பாஜக வில் இருந்த போது சில ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்றவர் தானே உங்கள் கட்சிக்கு தலைமை தாங்க தேவை படுகிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜக வை இயக்குவதாக கூறும் ராகுல் அவர்களே சென்ற ஆட்சியில் மன் மோகன் சிங் அவர்களை முன்வைத்து பொம்மை ஆட்சி நடத்தியதால் தானே அத்தனையும்  ஊழல்.

மன் மோகன்சிங்கை அன்று உங்கள் குடும்பமே இயக்கியதை  சமீபத்தில் வெளியான மருமகன் வதேரா ஊழல் சாட்சி. தேச பக்தர்கள், தெய்வ பக்தர்கள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பற்றி குறைகூற நேரு குடும்ப அரசியல் வாரிசுக்கு அருகதை இல்லை.

 

சென்னையில் அமர்ந்துகொண்டு நீங்கள் பிரியங்காவுக்கு குறுஞ் செய்தியில் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிப்பதாக அனுப்பி கொண்ட செய்தி கேட்டவுடன் அது உண்மையானால் இலங்கையில் தமிழர்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப்பட்டபோது எங்க போனது உங்கள் தமிழ் மக்கள் மீதான பாசம், தமிழ்ர்களை அழிக்க இந்திய அரசு ராணுவம் உட்பட அத்தனை உதவிகளும் செய்தது என்பது இலங்கை தமிழர்களை பழிவாங்கதானே? அன்று இலங்கை தமிழரை காக்க மறந்த நேரு குடும்ப வாரிசு இன்று இந்திய தமிழர்களை காக்க உண்மையிலேயே அக்கறை இருந்தால் கர்னாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி காவேரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு போடு இருக்கலாமே.

தமிழ்நாட்டின் வரலாறும், பண்பாடும் தெரிந்து கொள்ள தமிழ் சினிமாவை பார்க்க போவதாக சொல்லி இருக்கிறீர்கள், தமிழ்நாட்டில் வரலாறு தெரியாது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. சினிமாவில் வராத வரலாற்றை உங்கள் பார்வைக்கு. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் இறுதி யாத்திரை 1967-ல் நடத்தி முடித்தது திமுக தான். இந்திரா அம்மையாரை கொடூரமாக மதுரையில் தாக்கி ரத்தம் சொட்ட தப்பி பிழைத்தவரை, எழுத முடியாத வார்த்தைகளால் விமர்சித்தது திமுக தான். உங்கள் தந்தை ராஜிவ் காந்தி அவர்கள் ஸ்ரீபெரம்பத்தூரில் மனித குண்டு வெடித்து கொலையுண்ட அன்று மாலை திமுக முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டங்கள் முன்னேற்பாட்டுடன் ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற கேள்விக்கு ஜெயின் கமிசன் முன் வைக்கப்பட்டது இதுவரை விடை இல்லை என்ற வரலாறையும் நீங்கள் படிக்க வேண்டும். அதே போல் திமுக ஆட்சியில் உங்கள் தங்கை பிரியங்கா அவர்கள் வேலூர் சிறைச்சாலையில் ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்ட நளினி அவர்களை ரகசியமாக ஏன் சந்தித்தார் என்ற மர்ம வரலாற்றையும் நீங்கள் படிக்க வேண்டும். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறும் உங்கள் தலைவர்கள் காங்கிரஸ் யின் கடைசி கால ஆட்சியான திரு. பக்தவச்சலம் அவர்களின் ஆட்சி பற்றிய வரலாறும் நீங்கள் படிக்க வேண்டும் ஏன்னென்றால் மக்களை எலிக்கறி சாப்பிட சொன்னதும் ஹிந்திக்கு எதிராக போராடிய மாணவர்களை சுட்டு விழுத்தியதும் காங்கிரஸ் ஆட்சியில் தானே. மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக தொண்டர்கள் காங்கிரஸ் யின் துரோக வரலாறு நீங்கள் படிக்க.

 

பாஜக தமிழ்நாட்டில் மறைமுக ஆட்சி செய்வதாக கூறும் ராகுல் எந்த ஆதாரத்தில் இதை கூறுகிறார் என நிரூபிக்க வேண்டும். மண் மோகன் சிங்கை முன்னிறுத்தி இந்தியாவுக்கே பினாமி ஆட்சி நடத்திய சோனியா அம்மையாரின் மகனின் குற்றச்சாட்டு சிறுபிள்ளைத்தனமானது.

 

காஷ்மீர் பிரச்சனை பற்றி கலைஞர் வீடு முன்பு நின்று பேட்டி அளிக்கும் ராகுல் மனசாட்சிக்கு தெரியும் இன்றும் காஷ்மீர் பிரச்சனை பற்றி எரிவதற்கு காரணமே நேரு குடும்பம் ஏற்படுத்திய அரசியல் குழப்பமே இன்றும் உங்கள் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் ப. சிதம்பரம், மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் இந்திய ராணுவத்தையும், இந்திய இறையாண்மையையும் இழித்தும், பழித்தும் பேசுவது காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் உள்மனது வெளிப்படுகிறது, எல்லாமே மோடி அவர்களா என்று கேட்கிறீர்களே அன்று இந்தியவே இந்திரா, இந்திரா தான் இந்திய என்ற காங்கிரஸ் கூட்டம் இன்று மோடி அவர்களையும், பாஜக வையும் குறைசொல்வது தங்கத்தை பார்த்து, பித்தளை இழித்து கூறிய கதை தான்.

 

மோடி செல்லுமிடமெல்லாம் வெற்றி!!!

ராகுல் செல்லுமிடமெல்லாம் தோல்வி!!! – உங்கள் வேதனை புரிகிறது.

 

காங்கிரஸ் இல்லாத பாரதம் தான் எங்கள் குறிக்கோள் அதனை வருங்காலத்தில், தென்னகத்தில், தமிழ்நாட்டிலும் நிகழ்த்தி காட்டுவோம்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.