logo
அகோரம், பொன். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களை பா.ஜ.க.வில் இணைத்தார்

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் NDA வேட்பாளராக போட்டியிட்டவரும், டெல்டா விவசாயிகள் சங்க மாநில தலைவரும், அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவரும், பாமக முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளருமான திரு. அகோரம் அவர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி  பாஜக தேசிய தலைவர் திரு. அமித் ஷா  அவர்களின் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன் எனவும் உறுதி ஏற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (16/6/2017) நாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் தனது ஆதரவாளர்களை பா.ஜ.க.வில் இணைந்ததோடு, தமிழகத்தில் கழகங்கள் இல்லாத நிலை உருவாக்கி தமிழர்களை கவலைகள் இல்லாதவர்களாக மாற்ற கடுமையாக உழைப்பேன் எனவும் திரு. அகோரம் அவர்கள் தெரிவித்தார்.