logo
தமிழகத்திற்கு தேவையான ரயில் சேவைகள் குறித்து வலியுறுத்தல்

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர்  திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிகை செய்தி.

இன்று (02.08.2017) மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களை, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர்  திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து, கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை உள்ள புதிய ரயில் சேவை தொடங்குவது குறித்தும், புனே முதல் திருநெல்வேலி வரையிலான (01322) வாரந்திர ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டித்திடவும், வாரம் இருமுறை இயங்கும் அம்சஃபார் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவையை தொடங்கி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு  தமிழகத்திற்கு தேவையான  ரயில் சேவைகள் குறித்து வலியுறுத்தினார்.