logo
திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது
மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர்  திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிகை செய்தி.
இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராக திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தேர்வு மிகச்சரியானது என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.
திரு.வெங்கையா நாயுடு அவர்களின் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம், அரசியலமைப்பு புலமை மற்றும் சொல்லாற்றல் ஆகியவை அவரை மிகச்சிறந்த ஒரு
துணை குடியரசுத் தலைவராக பரிமளிக்கச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனது சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் திரு.வெங்கையா நாயுடு அவர்களின் தெரிவித்துக் கொள்கிறேன்.