logo
காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா?
காவிரி பிரச்சனையில் மத்திய பாஜக அரசை குறைசொல்லும் ஸ்டாலின், மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை?
சர்க்காரியா கமிசன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியது அன்றைய திமுக முதல்வர் கலைஞர். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது அமைதியாக இருந்த திமுக ஆட்சி. இன்று நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் தாமதத்தை குறைக்கூறும் திமுக. இறுதி தீர்ப்பில் உள்ள 12 க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடைகாண முடியாத கேள்விகள் என பல தரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பி உள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின் படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும். இதை மறந்து மத்திய அரசை தினமும் குறைசொல்லும் திமுக செயல் தலைவர் அறிக்கை திமுக வின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை.
Dr. தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.