logo
தீமை அழிந்து நன்மை பயக்கும் தினமே தீபாவளி

தீமை அழிந்து நன்மை பயக்கும் தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் இன்று நம்நாடு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகின்றது. பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் தொழில் துவங்கியிருப்பதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறைந்திருக்கின்றது. நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த நல்லநாளில் சபதம் ஏற்போம்.

இந்திய திருநாட்டை பாதுகாக்கின்ற பணியில் கண்துஞ்சாது நம்மை காக்கின்ற நம் ராணுவ சகோதரர்களை நினைவில் கொண்டு  ஒளிபரப்பும் இந்நாள் முதல் தொழில் வளர வேண்டும். விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும். பாரதம் தழைக்க வேண்டும். தேன் தமிழ்போல் பாரத மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் என அன்னை ஆதிபராசக்தியை வேண்டி  அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

 

–    பொன்.இராதாகிருஷ்ணன்