logo
கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்

தென்காசி அருகே கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. இது போன்ற கொடுமைகள் நம் மக்களுக்கு நடக்க கூடாது என்பதற்காக தான் நம் பாரத பிரதமர் முத்ரா வங்கி திட்டத்தை கொண்டுவந்தார், எந்த வித உத்திரவாத ஆவணங்களுக்கு வற்புறுத்தல் இல்லாமல் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ள இத்திட்டம் நம் மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும், இந்த கந்து வட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நமது மத்திய அரசின் எளிய கடன் வசதிகளை பயன்படுத்துவோம்.

Dr. தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்