logo
தினத்தந்திக்கு வாழ்த்துக்கள்

தத்தி தத்தி வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கூட புரியும் அளவிற்கு பத்திரிக்கை செய்தி தருவதும் தினத்தந்தி தான்.

பாமரனுக்கும் பிடிக்கும், பாவலவனுக்கும் பிடிக்கும் அளவிற்கு அதை படிக்க படிக்க செய்தி தருவதும் தினத்தந்தி தான்.

தமிழக அரசியல் கோட்டையிலிருந்து தெருக் கோடிக்கு எடுத்துச் செல்வதும் தினத்தந்தி தான்.

பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் பாமரனுக்கும் புரிய வைப்பதும் தினத்தந்தி தான்.

காலையில் தேநீர் இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் தினத்தந்தி படிக்காமல் இருக்க முடியாது என்ற அளவில் ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டற கலந்ததும் தினத்தந்தி தான்.

பத்திரிக்கை உலகில் பறந்து விரிந்து புகழ் பெற்ற தந்தி இன்று ஒளிப்பரப்பிலும் புகழ் பெற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி, ஐயா ஆதித்தனார், சின்ன ஐயா சிவந்தியார் வழியில் இன்று இளையவர் சகோதரர் பாலசுப்பிரமணிய ஆதித்தனார், வாழையடி, வாழையாக தமிழை வளர்த்து ஆல் போல் தழைத்த தரணியெங்கும் விழுதுகள் பதித்து இருக்கும் தினத்தந்தி பவள விழாவில் நம் பாரத பிரதமர் அவர்கள் பங்கேற்பது சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் இத்தருணம் இனி பிறக்கப்போகும் குழந்தைக்கும் தமிழ் சேவையை தினத்தந்தி தொடர்ந்து செய்யும் என்ற வரலாற்றை படைக்கும் தருணம் இப்பவளவிழா . தமிழக பாரதிய ஜனதா சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Dr. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.