logo
தினத்தந்தி நாளிதழுக்கு மனப்பூர்வமான வாழ்த்து

மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிகை செய்தி

தமிழ் நாளிதழ் வரலாற்றில் பவள விழா அரங்கேற்றத்தை கொண்டாடும் தினத்தந்தி நாளிதழுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

75- ஆண்டுகளுக்கு முன்பாக அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்களால் தமிழ் வளர்த்த மதுரையில் துவக்கப்பெற்ற தந்தி நாளிதழ், இன்று பதினேழு நகரங்களில் அச்சடிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு செய்தி சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது.

“வெல்க தமிழ்“ என்ற முத்திரை வாக்கியத்துடன் பவளவிழா காணுகின்ற தந்தி நாளிதழின்  விழாவில், இந்திய நாட்டின் வெற்றி திருமகனும், தமிழ் மீதும், தமிழ் சமுதாயத்தின் மீதும் அளப்பரிய பற்றும், பாசமும் கொண்டுள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையேற்று சிறப்பிப்பது தந்தி நாளிதழுக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயம் முழுமைக்கும் கிடைத்துள்ள முழு மரியாதையாகும்.

பவள விழாவை கொண்டாடும் தினத்தந்தி குடும்பத்தினர், தமிழ் சமுதாயத்திற்கு மேலும் பல தலைமுறைகளுக்கு பணியாற்றி நூற்றாண்டை கடந்து, மேலும் பல விழாக்களை காண அன்னை சக்தி அருள் புரிய வேண்டி பிரார்த்திக்கிறேன்.

–        பொன். இராதாகிருஷ்ணன்