logo
தினத்தந்தி மிகப்பெரிய சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறது

தினத்தந்தி நேற்று மிகப்பெரிய சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறது. நேற்றைய தினம் மரியாதைக்குரிய பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ந்திருக்கிறது.

பல வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த ஊடகமான தினத்தந்தி, இன்று தானே ஒரு வரலாற்று பதிவான ஊடகமாக மாறியிருப்பது மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல, தினத்தந்தியின் பவள விழா நிகழ்ச்சியில் தினத்தந்தியின் பெருமையும், ஐயா ஆதித்தனார், ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைகளையும் பிரதமர் குறிப்பிட்டது நம் தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. தந்தி எனும் தமிழ்ப்பத்திரிகைக்கு பெருமை சேர்த்து பிரதமர் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் தினத்தந்தி விழாவில் ஒட்டுமொத்த தமிழக பிரபலங்களும் ஒன்று கூடி வாழ்த்தியிருப்பது தந்தி அவர்கள் மீது காட்டியிருக்கும் பாசத்தையும், அத்தனைப் பெரியவர்களும் தந்தி மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஊடகத்துறையில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஓர் முன்னுதாரணமாக பவள விழா நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டியிருந்த தினத்தந்தி அதிபர் அன்பு சகோதரர் பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினத்தந்திக்குக் கிடைத்த பெருமை தங்களுக்குக் கிடைத்த பெருமையாக அத்தனை ஊடகங்களும் வெளியிட்டு மகிழ்ந்திருப்பதற்கு அத்தனை ஊடகங்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.