logo
செவிலியர் பணி சேவைப் பணி
சென்னையில் டிஎம்எஸ்-ல் நடந்து வரும் செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களை நேரில் சென்று சந்தித்தார் தமிழக பாஜக தலைவர், டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், மேலும் செவிலியர் பணி சேவைப் பணி ஆகையால் அவர்களை மற்றவர்களோடு ஒப்பிடாமல் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நோயாளிகளை தாய்போல் பார்த்து வரும் செவிலியர்களை, மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்தக்கூடாது.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்